நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் தற்போது எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்ப்போம். அதன்படி பாதுகாப்புத்துறைக்கு பட்ஜெட்டில் ரூ. 4.54 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன் பிறகு ஊரக வளர்ச்சி துறைக்கு ரூ.2.65 லட்சம் கோடி நிதியும், வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு 1.51 லட்சம் கோடி நிதியும், கல்வித்துறைக்கு 1.25 லட்சம் கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று உள்துறை விவகாரங்கள் துறைக்கு 1.50 லட்சம் கோடியும், ஐடி மற்றும் தொலைத் தொடர்பு துறைக்கு 1.16 லட்சம் கோடியும், சுகாதாரத்துறைக்கு 89,287 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் எரிசக்தி துறைக்கு ரூ.68,769 கோடியும், சமூக நலத்துறைக்கு ரூ.56,601 கோடியும், வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கு 47,559 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.