
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் புதிய வருமான வரி தொடர்பாக அறிவிக்கப்பட்ட நிலையில், பழைய வருமான வரிமுறையில் எந்த மாற்றமும் இல்லை என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அதன்படி பழைய வருமான வரி திட்டத்தில் ஏற்கனவே ரூ.2.5 லட்சம் வரை வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. அதன் பிறகு 2.5 லட்சம் முதல் 3 லட்சம் வரை 5% வரியும், 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை 5 சதவீத வரியும், 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை 20% வரியும் செலுத்த வேண்டும். மேலும் 10 லட்சத்திற்கு மேல் 20 சதவீத வரி செலுத்த வேண்டும். இந்த வழிமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.