
நாடே எதிர்பார்க்கும் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எட்டாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
முன்னதாக பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. தற்போது எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புக்கு மத்தியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பார்ப்போம்.
- பாதுகாப்பு துறை-4. 91 லட்சம் கோடி
- சுகாதாரம்- 98.311 கோடி
- உள்துறை- 2.3 லட்சம் கோடி
- கல்வி- 1.28 லட்சம் கோடி
- நகர்ப்புற வளர்ச்சி- 96777 கோடி
- ஊரக வளர்ச்சி- 2.6 லட்சம் கோடி
- சமூக நலன்- 60052 கோடி
- தகவல் தொடர்பு- 95298 கோடி
- வேளாண்மை- 1.7 லட்சம் கோடி
- வணிகம் தொழில்துறை- 65553 கோடி
- அறிவியல்- 55679 கோடி