நாடே எதிர்பார்க்கும் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எட்டாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். முன்னதாக பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. தற்போது எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புக்கு மத்தியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

  • ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அதிகரிப்பு
  • மாணவர்களுக்கு தாய்மொழியில் டிஜிட்டல் பாடங்கள் வழங்க திட்டம்
  • காப்பீட்டுத்துறையில் 100% அந்நிய முதலீடு, காப்பீட்டுத்துறையில் அந்நிய முதலீடு 74%லிருந்து 100% ஆக உயர்கிறது
  • சுற்றுலாத்தலங்கள் மாநில அரசுகளின் பங்களிப்புடன் மேம்படுத்தப்படும்
    மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
  • புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படும்