
நாடே எதிர்பார்க்கும் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எட்டாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். முன்னதாக பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. தற்போது எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புக்கு மத்தியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.
2 சொந்த வீடுகளுக்கு வரிச் சலுகைகள் பெறலாம்; வீட்டு வாடகைக்கான TDS உச்ச வரம்பு ₹6 லட்சமாக அதிகரிப்பு. ரூ.6 லட்சம் வரை வாடகை வருவாய்க்கு வரியில்லை. ரூ.6 லட்சம் வரையிலான வாடகை வருவாய்க்கு இனி TDS வரிப்பிடித்தம் கிடையாது. இதுவரை ரூ.2.40 லட்சத்திற்கு மேலான வாடகை வருவாய்க்கு TDS வரிப்பிடித்தம் அமலில் இருந்தது