
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட் 2025-26 தாக்கல் செய்கிறார். வருடத்தின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில் குடியரசு தலைவரை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சென்று சந்தித்தார். அப்போது குடியரசு தலைவர் நிதி அமைச்சருக்கு இனிப்பு ஊட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அதன் பிறகு மத்திய பட்ஜெட் உடன் நிதி அமைச்சர் நாடாளுமன்றம் வந்தார். இன்னும் சற்று நேரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில் தற்போது மத்திய அமைச்சரவை பட்ஜெட் தாக்கல் செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் இந்த பட்ஜெட்டில் பெரும் எதிர்பார்ப்புகள் நிலவுவதால் என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும் என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும்.