
நாடே எதிர்பார்க்கும் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எட்டாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். முன்னதாக பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. தற்போது எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புக்கு மத்தியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.
இனிமேல் 8 வகை இறக்குமதி வரியே இருக்கும்: மத்திய அரசு 7 வகை இறக்குமதி வரியை நீக்கியுள்ளது. இனிமேல் ஒரே ஒரு வகை கட்டணம் மட்டுமே விதிக்கப்படும். சமூக நல கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக நலனை மேம்படுத்துவதற்காக சமூக நல கட்டணம் அறிவிக்கப்பட உள்ளதாக கூறியுள்ளார்.