சாம்சங் டவுடா என்பவர் நைஜீரிய பிரிட்டிஷ் தொழில்முறை பாடி பில்டர் ஆவர். இவர் ஒலிம்பியா 2024 பட்டத்திற்கான போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இப்போட்டி லாஸ் வேகாசில் உள்ள ரிசார்ட்ஸ் வேர்ல்ட் திரை அரங்கில் நடந்த மார்க்கியோ நிகழ்வின் 60-வது மதிப்பில் கலந்து கொண்டார். இந்நிலையில் 15 வீரர்கள் கலந்து கொண்ட இப்ப போட்டியில் சாம்சங் டவுடா மிஸ்டர் ஒலிம்பியா 2024 பட்டத்தை வென்றுள்ளார்.

மேலும் ஹாடி சூபன் என்பவர் இரண்டாம் இடத்தையும், டெரெக் லூன்ஸ் போர்ட் என்பவர் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். இதில் டவுடா முதன் முறையாக மிஸ்டர் ஒலிம்பியா பட்டத்தை வென்றுள்ளார். அதோடு வெற்றி பெற்ற அவருக்கு ரொக்க பரிசாக ₹ 5 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவர் பாடி பில்டர் வரலாற்றிலேயே அதிக ரொக்க பரிசை பெற்ற முதல் வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.