டெல்லியில் உள்ள கரோல் பாக்கில் கட்டிடம் இடிந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த டெல்லி தீயணைப்பு துறையினர் காவல் துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு பணி வீரர்களுடன் சேர்ந்து மீட்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் 12 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும் பலர் இடிபாடுகளின் சிக்கி இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் கனமழை காரணமாக கட்டிடம் இடிந்து விழுந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.