சேலத்தை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஈரோட்டுக்கு சொந்த வேலை காரணமாக அரசு பேருந்தில் வந்தார். அந்த பேருந்து ஈரோடு பேருந்து நிலையத்திற்கு வந்து நின்றது. உடனே பயணிகள் ஒவ்வொருவராக இறங்கி கொண்டிருந்தனர். இந்நிலையில் இளம்பெண் கீழே இறங்கும்போது பேருந்து டிரைவரான பிரபாகரன் என்பவர் இளம்பண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பிரபாகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.