இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவரும் பணிக்கு செல்கின்றனர். ஆகவே காலை நேரத்திலேயே அனைத்து போக்குவரத்து வசதிகளும் மிகவும் கூட்ட நெரிசலுடன் காணப்படும். அதனால் ஓட்டுனர்கள் சிலர் பயணிகளை ஏறவிடாமல் சில நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதும் வழக்கத்தில் உள்ளது. இந்நிலையில் சண்டிகர் நகரில் ஓடும் பேருந்தின் கதவில் தொங்கியபடி ஒருவர் பயணித்துள்ளார். அந்த நபர் அலுவலகம் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்துள்ளார்.

இதில் நீண்ட நேர காத்திருப்புக்குப் பிறகு அவ்வழியே பேருந்து ஒன்று வந்த நிலையில் ஓட்டுனரும், நடத்துனரும் அவரை பேருந்தில் ஏற அனுமதிக்கவில்லை. மேலும் அந்த நபருக்கு அலுவலக பணிக்கு தாமதம் ஆகின்ற நிலையில் பேருந்தின் கதவின் அருகே தொங்கியபடியே சுமார் 1 கிலோ மீட்டர் அவர் பயணம் செய்துள்ளார். இது தொடர்பாக அந்த நபர் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஆகியோரை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்துள்ளனர்.