
சென்னையில் முகமது இஸ்மாயில் என்பவர் ஓட்டுனராக பணிபுரிந்து வரும் இவர் மற்றும் திருப்பூரில் மறுசுழற்சி செய்யப்பட்ட ஆடைகளை ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வரும் அபுதாகிர், கேசவராஜ், கலீல் அகமது ஆகிய 4 பேரை சைபர் கிரைம் காவல்துறையினர் தொழிலதிபரிடம் சுமார் ₹ 1 1/2 கோடி ஆன்லைன் மோசடி செய்ததற்காக கைது செய்துள்ளனர். மோதிலால் மற்றும் sbi செக்யூரிட்டி பெயரில் முதலீடு ஆலோசனைகளை வழங்கும் நிறுவனங்கள் பெயரில் youtube ரீல்சை பார்த்து தொழில் அதிபர் அதில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணெய் தொடர்பு கொண்டு உள்ளார். அப்போது மோசடி அரங்கேறியுள்ளது.
இதில் கலீல் அகமது மோசடிக்கு முக்கிய ஏஜெண்டாக இருந்ததோடு இந்தியாவிலிருந்து கம்போடியா சென்று அங்குள்ள மோசடி நிறுவனத்தில் தங்கி பணிபுரிந்து கொண்டே இவ்வாறான மோசடி வேலைகளில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. மேலும் கேசவராஜ் போலி நிறுவனம் மற்றும் வங்கி கணக்குகளை திறக்க உதவியுள்ளார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட நபர்களின் பின்னணி குறித்து மாநில சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.