
என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, ஒரு பக்கம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விவசாயம் செய்யணும்ன்னு நினைக்கிறார்கள்… நிதி கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்…. பயிர் காப்பீட்டு திட்டம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள்… சொட்டுநீர் பாசன திட்டம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்…. அடுத்த கட்ட இளைஞர்கள் விவசாயம் பண்ண வேண்டும் என மோடி நினைக்கின்றார்.
இன்னொரு பக்கம் ஸ்டாலின் அவர்கள், தஞ்சாவூரில் வயல்வெளியில் கான்கிரீட் ரோடு போட்டு நடத்துகிறார்… சிறப்பு கம்பளம் போட்டு நடத்துகிறார்… பொங்கல் அன்று பொம்மை மாட்டை கொண்டு வந்து…. போட்டோ சூட் பக்கத்தில் நிற்கிறார். விவசாயம் என்றால் என்ன என்று தெரியாதவர்கள், மாட்டினுடைய பால் காம்பிலிருந்து வருகிறதா ? கொம்பில் இருந்து வருகிறதா ? என்று தெரியாதவர்கள் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக இருப்பது நம்முடைய சாபக்கேடு சகோதர, சகோதரிகளே….
7 சகோதரர்கள் மீது… விவசாய பெருமக்களின் மீது போட்டிருக்கக்கூடிய குண்டாஸ் சட்டத்தை உடனடியாக வாபஸ் வாங்க வேண்டும்… அதற்காக திருவண்ணாமலையில் பாரதிய ஜனதா கட்சியினுடைய போராட்டம் இருக்கிறது. திருவண்ணாமலை அமைச்சர் ஏ.வா வேலு பத்திரிகையாளரை சந்திக்கிறார். குண்டாஸ் சட்டம் போட்டு இருக்கீங்க ? எதுக்கு போட்டு இருக்கீங்க ? என்ற கேள்விக்கு திமுகவினுடைய அமைச்சர் பதில் சொல்கிறார்…
குண்டாஸ் சட்டம் போடப்பட்டது இன்னைக்கு காலையில் பேப்பரில் பார்த்து தான் தான் தெரியும் ப்படின்னு அமைச்சர் சொல்லுகிறார். மறுபடியும் பத்திரிகை நண்பர்கள் கேட்கிறார்கள்…. அப்படி இருந்தும் விவசாய பெருமக்களின் மீது குண்டாஸ் சட்டம் போடுவது தவறு தானே, அதற்கு ஏ.வா வேலு சொல்கிறார்… தொழிற்சாலைகள் ஆகாசத்திலா கட்டுவது. இங்க தானே கட்ட முடியும். நிலம் வேண்டும் என சொல்கிறார் என விமர்சனம் செய்தார்.