
செய்தியாளரிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ், இன்றைக்கு டெல்டா மாவட்டங்கள் தண்ணீர் இல்லாமல் வாடிக் கொண்டிருக்கிறது. டெல்டாவுக்கு உரிய தண்ணீரை பெற்று தருவதற்கு முதலமைச்சர் தவறிவிட்டார். கர்நாடகாவிடம் இருந்து நமக்குரிய தண்ணீரை மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் என ஒவ்வொரு மாதமும் உரிய காலங்களில் பெற்று தர தவறியதனால், இன்றைக்கு குறுவை 3 லட்சம் ஏக்கர் கருகி பாலாகிபோய்விட்டது.
அதேபோல சம்பா இன்றைக்கு கேள்விக்குறியாகி இருக்கிறது. சம்பாவுக்கு தண்ணி இல்லை, குறுவை பாதித்து விட்டது. எனவே பாதிக்கப்பட்ட முன்னுரை லட்சம் ஏக்கர் குறுவைக்கு ஏக்கருக்கு 35,000 நிவாரணம் வழங்கிட வேண்டுமென எங்களுடைய கழகத்தின் பொதுச்செயலாளர், புரட்சி தமிழர் எடப்பாடியார் அவர்கள் கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டத்தை நடத்த சொல்லி இருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் உடனடியாக நமக்கு சேர வேண்டிய தண்ணீரை கர்நாடகாவில் இருந்து பெற்று தர வேண்டும் எனவும், பெற்று தராத இந்த திமுக அரசை…. முதலமைச்சரை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல கர்நாடகம் நமக்கு உரிய அந்த தண்ணீரை தராததால், கர்நாடக அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருக்கிறோம் என தெரிவித்தார்.