
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 60 ஆண்டுகளில் இந்த தலைநகரை கூட சரி பண்ணவில்லை என்றால், மற்ற ஊர்கள் எல்லாம்… மற்ற நகரங்கள் எல்லாம்…… முதன்மையைச் சாலையே இப்படி சவக்குழி மாதிரி இருந்தால்… உள் சாலைகள்… எல்லாம் நாங்கள் எல்லாம் இங்கிருந்து அந்த பகுதிக்கு போய் திரும்பி வருவதற்கும் என்ன பாடு படுகிறோம் என்று பாருங்கள் ? உங்களுக்கு அப்படி இல்லை… நீங்கள் வீட்டை விட்டு கிளம்பினால் மூணு மணி நேரத்திற்கு முன்னாடி சாலையை ஒழுங்கு படுத்தி விடுகிறார்கள்.
நூற்றுக்கணக்கான காவலர்கள் நின்று விடுகின்றார்கள். சரசரவென்று போய்விடுகிறீர்கள். மண்ணை, மக்களை பேரன்பு கொண்டு காதலிக்கின்றவனிடம் அதிகாரம் வரவேண்டும். எப்படியாவது ஏமாற்ற வேண்டும் என்று நினைப்பவனிடம் அதிகாரம் இருக்கக்கூடாது. இதெல்லாம் மாற்றம் வேண்டும் என்று துடிப்பவனிடம் அதிகாரம் வர வேண்டும். அப்ப தான் இதெல்லாம் சரி ஆகும். இல்லையென்றால் எந்த காலத்திலும் இப்படி மிதந்துகிட்டு இருக்க வேண்டியதான்.
இனி கொசு வரும்… நீர் தேங்குற இடத்துல என்ன வரும் ? கொசு வரும்… கொசு வந்துடனே டெங்கு வரும், சாக வேண்டியது தான. மலேரியா, காலரா, டெங்கு அப்புறம் டைப் ஆயிடும் எல்லாம் வரும்..மழைநீர் வடிகால் 98% முழுமையாக நிறைவடைந்து விட்டது என்று முதல்வர் சொன்னால் இறங்கி நடக்க சொல்லுங்கள். வாங்க கூப்பிட்டு வாங்க நடக்க சொல்லுங்கள்.