தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அதன் பின் கடந்த வருடம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அக்கட்சியின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதையடுத்து 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி தமிழக வெற்றிக் கழகம் விறுவிறுப்பாக பணியாற்றி வருகிறது.

இந்நிலையில் விஜய் பனையூரில் உள்ள தனது அலுவலகத்திற்கு வருகை தரும் போது, அவரை புகைப்படம் எடுக்க முயன்ற புகைப்படக்காரர் கீழே விழுந்ததால் விஜய் வாகனத்தை நிறுத்தினார். கீழே விழுந்த அவரிடம் ஓகேவா என சைகையால் கேட்ட விஜய், அதன் பிறகு நடந்தே அலுவலகம் சென்றார். திடீரென விஜய் வாகனத்தை விட்டு கீழே இறங்கி நடந்து சென்றதால் அங்கிருந்த தொண்டர்கள் உற்சாக குரல் எழுப்பி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.