
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏசுராஜசேகரன் என்பவர் காவல் ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 1.47 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் ஏசுராஜசேகரன் மீது வழக்கு பதிவு செய்தனர். இதற்கு முன்னதாக ஏசுராஜசேகரன் என்பவர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வேலை பார்த்து வந்தார்.
அவர் மீது வழக்கு செய்யப்பட்டதை தொடர்ந்து, காத்திருப்போர் பட்டியலுக்கு அவரை மாற்றி டிஐஜி உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு மாற்றப்பட்ட ஏசுராஜசேகரனை, குமரி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த 23ஆம் தேதி கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.