
பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் நதீம் அகமது என்பவர் விளையாட்டு கல்விக்கான துறையின் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இவர் அந்த பல்களைக்கழகத்தில் படிக்கும் மாணவியிடம் தகாத முறையில் ஈடுபட்டுள்ளார். அதோடு அந்த மாணவியின் செல்போனுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி துன்புறுத்தியுள்ளார். மேலும் தனது அலுவலகத்திற்கு வரும்படி மாணவியை அழைத்து இருக்கிறார். இதனைக் கேட்டு அந்த மாணவி சென்றபோது, அவரின் கையைப் பிடித்து தகாத முறையில் நடந்துள்ளார்.
அதன் பின்பு, தனது விருப்பத்திற்கு உடன்படாவிட்டால், அவர் பாடங்களில் தோல்வி அடைய செய்து விடுவேன் என்றும், பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற்றப்படுவாய் என்றும் மிரட்டியுள்ளார். இதுகுறித்து அந்த மாணவி பல்கலைக்கழக நிர்வாகிகளிடம் தெரிவித்தும் அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அந்த மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர் அகமதுவை கைது செய்தனர்.
அதோடு அந்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரான பேராசிரியர், அகமதுவை சஸ்பெண்ட் செய்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் அகமது, இதுபோன்று பல மாணவிகளிடம் தவறாக நடந்துள்ளார் என்று பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து பல்கலைக்கழக இயக்குனரிடம் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் தக்க சான்றிதழ்களை கடந்த மார்ச்சியில் அளித்துள்ளனர். உண்மை தெரிந்ததும், பல்கலைக்கழகம் அவரை சம்பளமின்றி 3 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட, பின்னர் இந்த விவகாரம் பற்றி நிர்வாகம் அடுத்து எந்தவித நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை. இதனால் அகமது மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார்.