மத்திய பிரதேச மாநிலத்தில் போபாலில் அரசு பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவருக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மாணவர்  ஒருவர் கேக்கை வெட்டுகிறார். அவர் அருகில் சில மாணவர்கள் உள்ளனர்.

அதில் ஒருவர் பீர் பாட்டலை ஓபன் செய்து கேக் வெட்டும் மாணவர் மீது தெளிக்கின்றனர். மற்ற மாணவர்கள் கையில் வெடிகளை வைத்து வெடிக்க முயற்சி செய்கின்றனர். இந்த வீடியோவின்  கடைசியில், அந்த வகுப்பறையின் ஆசிரியரும் இடம்பெற்றுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.