செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  இப்பொழுது காங்கிரசும் – திமுகவும் இணைந்திருக்கின்றன. காங்கிரஸ் கூட்டணியிலே அங்கம் வகிக்கின்றது. ஏன் அதை முதலமைச்சர் அவர்களிடத்திலே  வற்புறுத்தி பேசக்கூடாது.  இந்தியா  முழுவதும் ஒருங்கிணைப்பேன் என்று சொல்லுகின்ற முதலமைச்சர்,

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்துகொண்டு இருக்கின்றது. அந்த காங்கிரஸ் ஆட்சியில் இருக்கின்ற முதலமைச்சரை தொடர்புகொண்டு பேசி நமக்கு ஜூன் மாதம் கிடைக்கவேண்டிய 9 டி.எம்.சி  தண்ணீரை ஏன் பெறவில்லை ?

இது விவசாயிகளுக்கு இழைக்கப்படுகின்ற அநீதி. ஆக இன்றைக்கு தோழமைக்கட்சி, கூட்டணிக்கட்சி அங்கே ஆட்சியில் இருக்கின்றது. ஆக  விவசாயினுடைய நலம் கருதி இன்றைய முதலமைச்சர் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்றைக்கு கர்நாடகத்தில் புதிதாக அமைக்க பட்டிருக்கின்ற ஆட்சியிலே…

நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருக்கின்ற மாண்புமிகு அமைச்சர் சிவகுமார் அவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு இந்த செய்தியை  வெளியிட்டு இருக்கிறார்கள். அங்கே அமைதியாக அந்த மாநிலம் இருந்து கொண்டு  இருக்கிறது. அதை  சீர்குலைப்பதற்கு தான் இப்படிப்பட்ட செய்தியை வெளியிடுகிறார் என்று நான் கருதுகிறேன்.

இரண்டு மாநிலங்களும் தீர்ப்பை ஏற்றுகொண்டுவிட்டது. உச்ச நீதி மன்ற தீர்ப்பை ஏற்றுக்கொண்டுவிட்டது. அதற்கு உண்டான வழிமுறைகளை நம்முடைய உச்சநீதிமன்றம் தெரிவித்து, அதன் அடிப்படையிலே இன்றைக்கு காவிரி மேலாண்மை ஆணையம், காவேரி  நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டு  அது முறையாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது  என தெரிவித்தார்.