கோவை மாவட்டத்தில் சட்டத்துக்கு விரோதமான போதைப் பொருள்கள் விற்பவர்களிடம் காவல்துறையினர் லஞ்சம் வாங்குவதாக புகார் வந்தது. இதுதொடர்பாக மாவட்ட காவல்துறை  கண்காணிப்பாளர் கார்த்திகேயன் விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்படி நடத்தப்பட்ட விசாரணையில், சட்டவிரோதமாக போதைப் பொருள்கள் விற்பனை செய்தவர்களிடம் லஞ்சம் பணம் பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 4 காவல் துறையினரை பணியிடம் நீக்கம் செய்து அவர் உத்தரவிட்டார்.

அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமை காவலர், மதன் குமார், செல்வகுமார், பஞ்சலிங்கம் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதுகுறித்து கண்காணிப்பாளர் கார்த்திகேயன் கூறியதாவது, கோவை மாவட்டத்தில் மது மற்றும் கல் விற்பவர்களிடம் லஞ்சம் பெறும் காவல்துறையினர் மீது எழுந்த புகார்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.