
கர்நாடகா மாநிலத்தில் 17 வயதான சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்கி என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாளடைவில் விக்கி அச்சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன் வசப்படுத்தி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார். இது பற்றி அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் கான்ஸ்டபிள் அருண் என்பவர் விக்கியுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். இதையடுத்து இளம் பெண்ணிடம் நீதி கிடைக்க செய்வேன் என்றும், வேலை வாங்கி தருவதாக பொய்யான வாக்குறுதி கொடுத்துள்ளார்.
பின்னர் பெங்களூர் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு வரும்படி அழைத்துள்ளார். இதனால் நம்பி சென்ற இளம் பெண்ணுக்கு, கான்ஸ்டபிள் அருண் மதுபான பாட்டிலில் மயக்கம் மருந்து கலந்து வற்புறுத்தி குடிக்க வைத்துள்ளார். அதன் பின் இளம் பெண்ணை கான்ஸ்டபிள் பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்துள்ளார். இது குறித்து வெளியே கூறினால் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி உள்ளார். இதையடுத்து காவல்துறையினர் அருண் மற்றும் விக்கி ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இவர்கள் இருவருக்கும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.