தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் குஷ்பூ. இவர் பி. வாசு இயக்கத்தில் நடித்த சின்னத்தம்பி திரைப்படம் கடந்த 1991-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் நடிகர் பிரபு, ராதாரவி, மனோரமா போன்ற பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் இடம்பெற்ற நீ எங்கே அன்பே உட்பட அனைத்து பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. இந்நிலையில் நடிகை குஷ்பூ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதாவது சின்னத்தம்பி திரைப்படம் ரிலீஸ் ஆகி 25 வருடங்கள் நிறைவடைந்ததை குஷ்பூ நினைவு கூர்ந்துள்ளார். அதன் பிறகு இயக்குனர் பி. வாசு மற்றும் பிரபு ஆகியோருக்கு நடிகை குஷ்பூ நன்றி தெரிவித்ததோடு நந்தினி என்றென்றும் உங்கள் இதயத்தில் இருப்பார் என்று பதிவிட்டுள்ளார். மேலும் சின்னதம்பி படத்தில் போஸ்டரையும் குஷ்பூ தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.