உத்திர பிரதேசத்தின் சம்பல் பகுதியில் கார் ஓட்டுநருக்கும், காய்கறி விற்பனையாளருக்கும் இடையே சாலையில் நடந்த தகராறு இணையதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சம்பல் மாவட்டம் சந்தௌசி பகுதியில் கார் ஓட்டுநர் ஒருவர் சாலையில் சென்று கொண்டிருந்த நிலையில் முன்னால் சென்ற காய்கறி விற்பனையாளரின் வண்டியின் மீது மோதினார்.

இதைத் தொடர்ந்து காரிலிருந்து இறங்கி வந்த ஓட்டுநர் மிகவும் கோபத்துடன் விற்பனையாளரை தாக்க முற்பட்டார். இந்நிலையில் விற்பனையாளர் தன்னை தற்காத்துக் கொள்வதற்காக கார் ஓட்டுநரை பலமாக தாக்கினார். அவரது கன்னத்தில் அறைந்த நிலையில் சட்டையையும் கிழித்து விட்டார். இந்த சம்பவம் வீடியோவாக இணையத்தில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் விற்பனையாளருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அதில் ஒருவர் “ஏழைகள் என நினைத்தால் யாரும் பயப்பட மாட்டார்கள் என்பதற்கான எடுத்துக்காட்டு இது” என்று பதிவிட்டுள்ளார். இன்னொருவர் இது உடற்பயிற்சி உந்துதலாக இருக்கும் இருக்கட்டும். பருமனாக இருப்பது வலிமையாக இருப்பதை குறிக்காது” என்று நகைச்சுவையாக கருத்து தெரிவித்துள்ளார். மேலும்  இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.