கர்நாடகா மாநிலத்தில் சல்லகேர் மற்றும் பல்லாரி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. அந்த சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்த நிலையில் 15 முறை பல்டி அடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் இருந்த ஒருவர் கீழே விழுந்துள்ளார். இந்த கோர விபத்தின் காட்சிகள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மௌலா, சமீர் மற்றும் ரஹ்மான் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அதோடு அவர்களுடன் இருந்த 2 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் கர்நாடகாவின் யாத்கீர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் உயிரிழந்தவர்களில் 2 பேர் குழந்தைகள் என்றும் காவல்துறையின் விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்தில் சிக்கிய கார் முற்றிலும் சேதமடைந்த நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.