ஜார்கண்ட் மாநிலம் மொஹாலியில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் 39 வயது விஞ்ஞானி பார்க்கிங் தகராறு காரணமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மொஹாலியில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் செக்டர் 67 இல் அபிஷேக் ஸ்வரங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். ஜார்கண்டின் தன்பாத் என்ற பகுதியில் பிறந்த இவர் ஒரு சிறந்த விஞ்ஞானி ஆவார்.

அதோடு சுவிட்சர்லாந்தில் பணியாற்றிய பின் அண்மையில் இந்தியாவிற்கு திரும்பி பணி புரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது வாடகை வீட்டின் அருகே கார் பார்க்கிங் தொடர்பாக அருகில் குடியிருந்த மொண்டி என்பவருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அபிஷேக் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு செல்லும்போது மொண்டி அவருடன் வாக்குவாதம் நடத்தினார். அப்போது திடீரென மொண்டி அவரை தரையில் தள்ளி சரமாரியாக அடித்தார். இதனைக் கண்ட அவர்களது குடும்பத்தினர் மொண்டியை தடுத்தனர்.

இவர் சரமாரியாக அடித்ததால் அபிஷேக் தரையில் விழுந்து உயிருக்கு போராடிய நிலையில் காணப்பட்டார். அவரை அங்கிருந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது தொடர்பாக அபிஷேக்கின் குடும்பம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததுடன் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

அந்தப் புகாரின் படி காவல்துறையினர்  மொண்டியை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.