
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டி.ஜி.பி. சுனில் குமார் நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து அதிமுக முன்னாள் எம்எல்ஏ சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில், மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் அவரை நியமனம் செய்ததற்கு எந்த அரசியல் காரணமும் இல்லை. தகுதியின் அடிப்படையில் மட்டுமே நியமிக்கப்பட்டார் என்று உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள 11 அதிகாரிகளும் மற்ற பிரிவுகளில் பணியாற்றி வருவதால் சுனில் குமார் நியமிக்கப்பட்டார் எனவும் விளக்கம் அளித்துள்ளது.