கோயம்புத்தூரில் உள்ள ஆவல்பட்டியில் வரதராஜ பெருமாள், சென்ராய பெருமாள் கோவில்களுக்கு குறிப்பிட்ட சாதியை சேர்ந்த அறங்காவலர்கள் நியமிப்பது தொடர்பாக விசாரணை வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கு நீதிபதி பரதசக்கரவர்த்தி விசாரணையின் கீழ் நடைபெற்றது. இந்த விசாரணையின் போது நீதிபதி கூறியதாவது, பிறப்பால் வரும் சாதி.

“பிறர்பொக்கும் எல்லா உயிருக்கும்” என்ற நெறிமுறைக்கு எதிராக உள்ளது வேதனை அளிக்கிறது. சாதி என்ற தேவையில்லாத சுமையை சமுதாயத்தில் உள்ள சில பிரிவினர் இன்னும் கீழ் இறக்கவில்லை. சமூகத்தை பிளவுபடுத்தி, ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி கலவரங்களை தூண்டும் சாதி வளர்ச்சிக்கு எதிரானது. சாதியை நிரந்தரமாகச் செய்யும் எதையும் நீதிமன்றம் பரிசீலிக்காது. சாதியை நிரந்தரமாக்க செய்யும் கோரிக்கை அரசியல் சாசனம், பொதுக் கொள்கைக்கு விரோதமானது என நீதிபதி திட்டவட்டமாக கூறியுள்ளார்.