
கே.எஸ் அழகிரி, காவிரி விவகாரம் தொடர்பாக பாஜக போராட ஆரம்பிச்சிருச்சு, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் என்ன சொல்றீங்க? என்ற கேள்விக்கு பதிலளித்த கே.எஸ் அழகிரி, இந்தப் பிரச்சினையை முதலில் கையில் எடுத்ததே நாங்கள் தான். போராட்டம் நடத்தினால் ? எடியூரப்பாவுக்கு எதிராக… பொம்மைக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும். காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற நம்முடைய கோரிக்கையை ஏற்று, கர்நாடக அரசு 15,000 கன அடி தண்ணீரை திறந்து விட்டார்கள்.
அவங்க திறந்து விட்ட அடுத்த நிமிஷத்துல, கர்நாடகாவுல கலவரம் வந்தது. அந்த கலவரத்தை ஆதரித்து யாரு பேசினார்கள்? பாரதிய ஜனதா சார்ந்த எடியூரப்பாவும், பொம்மையும் தான் பேசினார்கள். தமிழ்நாட்டில் இருக்கிற பாரதிய ஜனதா அவங்கள பாத்து கேள்வி கேட்டாங்களா ? எங்க மாநிலத்துக்கு தண்ணி வருது. எங்க முதலமைச்சர் சிரமப்பட்டு பெற்று வருகிறார். எதற்காக அதை எதிர்க்கிறீர்கள்? என்று இவர்கள் கேட்டார்களா ? கேட்கலையே…. கேட்டு இருக்கணும் இல்ல.
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி… அதனுடைய ஒரு சில தலைவர்கள் தமிழகத்திற்கு தண்ணீர் விடுவதில் சிரமம் இருக்கணும்னு சொன்னப்ப, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக நான் எதிர்த்தேன், நாங்க எதுத்தோம். அதை எதிர்த்து கடுமையாக பேசினோம். தண்ணீர் பெறுவது எங்களுடைய உரிமை. உங்களுக்கு காவிரி ஆணையம், உச்ச நீதிமன்றம் என்ன சொல்லி இருக்கிறதோ, அந்த தண்ணீரை தான் நாங்கள் கேட்கிறோம். நாங்கள் அதிகப்படியாக தண்ணீரை கேட்கவில்லை. எங்களுடைய உரிமையை கேட்கிறோம் என்று நாம் சொன்னோம். ஆனால் அன்னைக்கு பிஜேபி மௌனமாக இருந்தாங்க, நாம அத பேசுனோம்.
ஏன் பிஜேபி மௌனமா இருக்காங்க? பிஜேபி எடியூரப்பாவுக்கு எதிராக…. பொம்மைக்கு எதிராக சத்தம் போட வேண்டாமா ? அறிக்கை கொடுக்க வேண்டாமா ? அவர்கள் செய்வது நாடக அரசியல். அந்த மாநிலத்தில் காங்கிரஸ்க்கு எதிராக அவர்கள் பேசுகிறார்கள். இந்த மாநில மாநிலத்தில் திமுகவிற்கு எதிராக பேசுறாங்க. அவங்களுக்கு காவிரி நீர் தேவையில்லை. இந்த ரெண்டு ஆட்சியையும் துன்புறுத்தணும், கலைக்கனும், சிரமப்படுத்தனும் என்பதுதான் அவர்களுடைய நோக்கம் என தெரிவித்தார்.