
மூன்று மாதங்களுக்குப் பிறகு பிப்ரவரி ஒன்றாம் தேதி காவேரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது.இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு ஜனவரி, பிப்ரவரி மாதத்திற்கு 5.26 TMC தண்ணீர் திறக்க ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தது. தொடர்ச்சியாகவே காவேரி மேலாண்மை ஆணையம் உத்தரவின் அடிப்படையில் தமிழகத்திற்கு உண்டான நீரை பெற்றுத்தர வேண்டும் என்று பலமுறை தமிழகம் வலியுறுத்தி கொண்டே வருகிறது. இன்னொரு புறம் கர்நாடகா எங்களுக்கே தண்ணீர் இல்லை என்று தொடர்ச்சியாக சொல்லி வருகிறது. மூன்று மாதங்களுக்கு பிறகு பிப்ரவரி 1ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கூடுவது குறிப்பிடத்தக்கது.