
M.E., M.Tech படிப்புகளுக்கு புதிதாக அறிமுக செய்யப்பட்டுள்ள CEETA மற்றும் MBA, MCA படிப்புகளுக்கான TANCET நுழைவு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 20 கடைசி நாளாக இருந்தது. இந்நிலையில் தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு, பிப்ரவரி 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. CEETA நுழைவு தேர்வு மார்ச் 26ஆம் தேதியும், TANCET மார்ச் 25ஆம் தேதியும் நடைபெற உள்ளது.