கேரளா திருச்சூரில் பிரபல தங்க நகை நிறுவனமான ஜோய் ஆலுக்காஸ் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் சேர்மன் ஜோய் ஆலுக்காஸ். இவர் ரோல்ஸ் ராய்ஸ் கார்  தனக்கு நடந்த அவமானத்தை பற்றி கூறியுள்ளார். இவர் அமெரிக்காவில் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் ஷோரூமில்  கார் வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் அவரை  உள்ளே அனுமதிக்கவில்லை. இதற்கு அவர்  தான் கார் பார்க்க வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு அந்த ஊழியர்கள் கார் வாங்க வேண்டும் என்றால் மிட்டுசுபிஷி ஷோரூமுக்கு சென்று வாங்குங்கள் என்று கூறினர்.

இதனால் தான் அவமான பட்டதாக உணர்ந்த அவர் அந்த காரை வாங்க வேண்டும் என்று அன்றைய தினம் தீர்மானம் செய்தார். அதனால் அவர் விலை உயர்ந்த கார் கலெக்ஷன்களை வாங்க கடந்த மார்ச் மாதம் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் என்ற காரை 6 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார். அவரிடம் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் என்ற காரம் உள்ளது. 67 வயதான இவர் இவர் 4.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்கு உரிமையாளர். இவர் இந்தியாவின் 50 வது பணக்காரர் ஆவார்.