
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி இன்று முதல் பழனி முருகன் கோயிலில் செல்போன் பயன்படுத்த தடை உத்தரவிட்டுள்ளது.
பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் தினமும் வருகை தருவது வழக்கம். அப்படி வருகை புரிந்து வரும் பக்தர்கள் சாமியை புகைப்படம் எடுத்து தங்களது சமூகவலைத்தளங்களில் பதிவு செய்வது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் வழக்கு தொடர்ந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையானது செல்போன் பயன்படுத்த தடை உத்தரவிட்டது.
அதனால் இன்று முதல் பழனி கோயிலில் செல்போன்கள் தடை உத்தரவு அமலுக்கு வந்தது. பக்தர்கள் செல்போன், கேமரா உள்ளிட்ட சாதனங்களை கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் மற்றும் தங்கள் செல்போன், கேமராக்களை பாதுகாப்பாக மலையடிவாரத்தில் வைத்து செல்லும் வசதியாக கோவில் நிர்வாகம் மூன்று இடங்களை தேர்வு செய்துள்ளது.
அப்படி வைத்து செல்லும் பக்தர்களுக்கு ஒரு செல்போனுக்கு ஐந்து ரூபாய் கட்டணம் விதம் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு கம்ப்யூட்டர் ரசிது வழங்கப்படுகிறது. மேலும் பக்தர்களின் கூட்டு நெசலை தவிர்க்கும் விதமாக, கோவில் நிர்வாகம் சார்பில் பத்துக்கும் மேற்பட்ட வரிசைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் திருவிழா காலங்களில் கூட்டம் அதிகளவில் வருவதால் விரைவான சேவையை இன்னும் அதிகப்படுத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.