
சென்னை மாவட்டத்தில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுள்ளது. அந்த ரயிலில் பயணித்த பயணி ஒருவர் ரயிலின் கதவு அருகே அமர்ந்து செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது ஓடும் ரயிலில் இளைஞர் ஒருவர் குச்சியால் தட்டி அந்த பயணியின் செல்போனை பறித்து சென்றார். இச்சம்பவம் தொடர்பாக அந்த பயணி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் ல்போனை பறித்து சென்ற இளைஞர் பரத்குமார்(19) என்பது தெரியவந்தது.
அதன் பின் இளைஞரிடமிருந்து அந்த பயணியின் செல்போன் மீட்கப்பட்டது. இதனை அடுத்து காவல்துறையினர் பரத்குமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.