கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ ஆதனூர் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கொளஞ்சி என்ற மனைவி உள்ளார். நேற்று காலை கொளஞ்சி வயலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்திருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கொளஞ்சியின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி விட்டு 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் கண் எரிச்சல் தாங்க முடியாமல் அலறி துடித்த கொளஞ்சியை அக்கம் பக்கத்தினர் மீட்டனர். இதுகுறித்து கொளஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.