நடப்பாண்டின் சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம். ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கும் ஒன்பதாவது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் வருகிற 19ஆம் தேதி முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை நடக்க இருக்கிறது. பாதுகாப்பு கருதி இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்கான ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது.

இந்த நிலையில் இந்த தொடருக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. அதன்படி கோப்பையை வெல்லும் அணிக்கு இந்திய மதிப்பில் 19.45 கோடி பரிசு தொகையும், இரண்டாவது இடம் பெறும் அணிக்கு 9.72 கோடி ரூபாய் பரிசும், அரை இறுதியில் தோல்வியடைந்த அணிகளுக்கு 4.86 கோடி பரிசு தொகையாக கிடைக்கும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.