
சந்திராயன் – 3 ராக்கெட் ஜூலை 14 இல் விண்ணில் செலுத்தப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சந்திராயன் – 3 ராக்கெட் ஜூலை 14-ம் பிற்பகல் 2:35 மணிக்கு விண்ணில் பாயும் என்று இஸ்ரோ அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நிலவு குறித்து ஆராய்ச்சிக்காக சந்திராயன் 3-யை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. திட்டமிட்டபடி ஜூலை 14ஆம் தேதி 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. சந்திராயன் 3 விண்கலம் ராக்கெட் LVM MK மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. சந்திராயன் மூன்று விண்கலத்தின் அனைத்து பாகங்களும் ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Announcing the launch of Chandrayaan-3:
🚀LVM3-M4/Chandrayaan-3 🛰️Mission:
The launch is now scheduled for
📆July 14, 2023, at 2:35 pm IST
from SDSC, SriharikotaStay tuned for the updates!
— ISRO (@isro) July 6, 2023