
சந்திரயான்-3 தரையிறங்கிய பிறகு எம்எஸ் தோனி மற்றும் அவரது மகள் கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது..
இந்தியா புதன்கிழமை (ஆகஸ்ட் 23) வரலாறு படைத்துள்ளது. இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம் வெற்றியடைந்துள்ளது. நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த உலகின் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சும் பெருமிதம் கொள்கிறது.
இதற்கிடையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியும் இந்தியாவின் சந்திரயான் -3 மிஷன் வெற்றியடைந்ததை அடுத்து ஒரு சிறப்பு கொண்டாட்டத்தை செய்துள்ளார். இதன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் எம்எஸ் தோனி ஷார்ட்ஸ் மற்றும் ஜிம் பனியனில் நிற்பதை காணலாம். சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றியை அவர் மிகவும் அமைதியான முறையில் கொண்டாடுகிறார். அவர் தொடையைத் தட்டுவதை படத்தில் காணலாம். மேலும் எம்எம் தோனியின் மனைவி சாக்ஷி சிங் தோனியும் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். இதில் ஜிவா தோனி கொண்டாடி வருகிறார்.எம்எஸ் தோனி மற்றும் பிற இந்திய கிரிக்கெட் வீரர்களும் சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றியை கொண்டாடினர்.
மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் முதல் விராட் கோலி உட்பட பல கிரிக்கெட் வீரர்களும் சந்திராயன் குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.. நிலவுக்குச் சென்ற 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. முன்னதாக சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் நிலவில் கால் பதித்துள்ளன. நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
Starting our Day with this Pictures of Thala Dhoni Celebrating the Success of Chandrayaan 3 !! 🚀🥳#MSDhoni | #Chandrayaan3 | #WhistlePodu
📸 via Chandrashekhar pic.twitter.com/9Uz7VeQDPb— Saravanan Hari 💛🦁🏏 (@CricSuperFan) August 24, 2023
MS dhoni celebrating the moment of Chandrayaan 3.
– What a beautiful video. pic.twitter.com/Ehv0DgpUl8
— Johns. (@CricCrazyJohns) August 23, 2023
MS Dhoni's daughter, Ziva celebrating when Chandrayaan reached the Moon.pic.twitter.com/0x6O3qZEjR
— Johns. (@CricCrazyJohns) August 23, 2023