
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை 2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்வதன் மூலம் மருத்துவத்துறையில் என்ன மாற்றங்கள் இருக்கும்? என பார்க்கலாம். மெரில் லைஃப் சயின்ஸ் நிறுவனத்தின் ஸ்ட்ராட்டஜி பிரிவின் துணைத்தலைவர் சஞ்சீவ் பட் மருத்துவ சாதனத் துறைக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
உலக அளவில் மருத்துவ சாதனங்கள் துறை வளர்ச்சி கண்டுள்ளது. நோயாளிகளின் பரிசோதனை முடிவுகள், அணுகல் தன்மையை மேம்படுத்துவதன் மூலம் மருத்துவத்துறையில் பெரும் மாற்றம் ஏற்படும் எனவும், மருத்துவ சாதனங்கள் துறை முக்கிய பங்கு வகிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்தியாவில் 21 ஆம் நூற்றாண்டில் முதல் காலாண்டில் மாற்றம் ஏற்பட்டது. உயர்தர மலிவு, மருத்துவ தொழில்நுட்பங்களுக்கான உலகளாவிய மையமாக இந்தியா மாற வேண்டும் என கூறியுள்ளார்.
மத்திய அரசாங்கத்தின் தொலைநோக்கு முன் முயற்சிகளால் உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டம் மற்றும் சுகாதார உள்கட்டமைப்பில் வலுவான கவனம் செலுத்துதல் தொடர வேண்டுமென கூறியுள்ளார். அந்த நடவடிக்கைகள் புதுமை முதலீடுகள் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப உற்பத்தியில் தன்னிறைவை ஏற்படுத்தும். ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஏற்றுமதிகள் மற்றும் தொழில் சார்ந்த ஊக்குவிப்புகளில் மத்திய அரசின் ஆதரவு தொடர வேண்டும் என சஞ்சீவ் வலியுறுத்தியுள்ளார்.