
போர் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டடுள்ள உக்கரைன் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிய ஜப்பானை சேர்ந்த ஒருவர் உதவி செய்து வருகிறார். ஜப்பான் நாட்டை சேர்ந்த அவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போலந்து நாட்டை சுற்றி பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது போர் காரணமாக உக்கிரைனுக்கு சென்ற அவர் கடந்த ஓராண்டாக அங்கு உள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவி செய்து வருகின்றார். போருக்கு பின்னர் பலர் உக்கரனை விட்டு சென்ற நிலையில் அங்குள்ள மக்களுக்கு வெளிநாட்டிலிருந்து வரும் உதவிகளை செய்து வரும் செயல் பாராட்டை பெற்றுள்ளது. மேலும் அவர் போர் ஓயும் வரை உக்ரைனில் இருக்க போவதாகவும் தெரிவித்துள்ளார்.