கரூர் மாவட்டம் ராயனூர் பகுதியில் முகேஷ் என்கிற ராமசுப்பிரமணி வசித்து வருகிறார். இவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்து, 2-வது மனைவியான ஷோபனாவுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் ஷோபனாவின் தோழியான ரம்யா என்பவர் அவ்வப்போது அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே உள்ள உறவு புதிய பரிமாணம் பெற்றது.

அதோடு ரம்யாவுக்கும், தொழிற்பேட்டையை சேர்ந்த விஜய்க்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஷோபனாவுக்கும், விஜய்யின் குடும்பத்தினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு, கடந்த மாதம் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த முகேஷ் தன் மனைவியிடம் தகராறில் ஈடுபட்ட விஜய் மற்றும் அவரது குடும்பத்தினரை பழிவாங்க கத்திகள், துப்பாக்கிகள் மற்றும் அரிவாள்கள் வாங்கி வைத்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் முகேஷின் வீட்டில் சோதனை செய்து ஆயுதங்களை கைப்பற்றினர். அதோடு காவல்துறையினர் முகேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளான 6 பேரை கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்கள் கோர்ட்டில் ஆஜார் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.