
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் விரைவில் புதிய மாற்றம் அமலுக்கு வர இருக்கிறது. அதாவது டாஸ்மாக் கடைகளில் மது வழங்கிய பிறகு பில் கொடுக்கப்படும் நடைமுறை அமலுக்கு வர இருக்கிறது. இந்த புதிய செயல்முறை தீபாவளி பண்டிகைக்கு பிறகு அமலுக்கு வருகிறதாம். அதாவது டாஸ்மாக் கடைகளில் ஊழியர்கள் அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்து கொண்டே இருக்கிறது.
இதனை தடுப்பதற்காக தான் தற்போது பில் வழங்கும் நடைமறையை அறிமுகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக பார்கோடு முறையில் ஸ்கேன் செய்து பில் வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டால் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்படாது என்பதால் மது பிரியர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.