
அமெரிக்காவில் வசித்து வரும் பெண் ஒருவர் பூனையை தலையில் மிதித்து கொன்று, அதனை பகிரங்கமாக சாப்பிட்டதால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சி ஆயினர். அதாவது அமெரிக்காவில் ஓஹியோ மாநிலத்தில் Allexis telia ferrell என்னும் பெண் வசித்து வருகிறார்.இவர் canton ன் 13-வது தெருவில் அமைந்துள்ள ஒரு வீட்டு வளாகத்தில் தங்கியிருக்கிறார்.
இந்நிலையில் தன் வீட்டில் வெளியே வைத்து பூனை ஒன்றை அதன் தலையில் மிதித்து அடித்துக் கொன்றுள்ளார். அதன் பின் அந்தப் பூனையை அவர் சாப்பிட்டு உள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியாயினர். அதனால் அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் படி Allexis telia ferrell காவல்துறையினரால் 16ஆம் தேதி இரவு 11:00 மணிக்கு கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அந்தப் பெண் மீது விலங்குகளை காயப்படுத்துதல், வீட்டு விலங்குகள் மீது வன்கொடுமை மற்றும் ஒழுங்கீனமான நடத்தை போன்ற வழக்குகள் வைத்தால் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்ட வருகிறது.
மேலும் திங்கட்கிழமை அன்று நடந்த விசாரணையின் போது Allexis telia ferrell க்கு ஒரு லட்சம் டாலர்கள் என அபராதம் விதிக்கப்பட்டது.