கர்நாடக மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 135 தொகுதிகளை கைப்பற்றிய காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. கர்நாடகாவில் முதல்வராக சித்த ராமையாவும் துணை முதல்வராக டி.கே சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் முதல்வர் பதவி ஏற்பு விழா மே 20-ம் தேதி நடைபெறும் நிலையில் அந்த விழாவில் கலந்து கொள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே அழைப்பு விடுத்துள்ளார். இதனால் நாளை முதல்வர் ஸ்டாலின் கர்நாடகாவுக்கு செல்லும் நிலையில் தற்போது பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நாளை தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து விட்டதாலும், அவற்றால் பலி எண்ணிக்கை அதிகரித்து விட்டதாலும் தமிழ்நாடு முழுவதும் தாய்மார்கள் போராட்டம் நடத்துவார்கள். சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் நான் கலந்து ‌ கொள்வேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் ஸ்டாலின் கர்நாடகாவுக்கு செல்லும் நிலையில் அவரின் பயணத்தை திசை திருப்பும் நோக்கத்திற்காகவே பாஜக அண்ணாமலை அதே நாளில் போராட்டத்தை அறிவித்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் விமர்சிக்கிறார்கள்