தமிழக சட்டசபையில் கவர்னர் உறையில் கூறியதாவது, மக்களின் குறைகளை உடனுக்குடன் கேட்டு அறிந்து, அதற்கான தீர்வு வழங்குவதற்கு இந்த அரசு முன்னுரிமை அளித்துள்ளது. இதன்  அடிப்படையில் மக்களிடம் மனுவை பெற்ற 30 நாட்களுக்குள் அரசின் சேவைகளை அவர்களது வீட்டிற்கே சென்று வழங்கும் நோக்கத்துடன் மக்களுடன் முதல்வர் திட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதல் கட்டத்தில் நகர்ப்புறங்களில் 2058 முகாம்கள் நடத்தப்பட்டது. அதில் 9.05 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டது.

நகர்ப்புற மக்களிடையே இத்திட்டம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, ஊரக பகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டது. 2344 முகாம்கள் மூலம் 12,525 கிராம ஊராட்சிகளில் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் முகாம்களில் பொதுமக்களின் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகைக்கு விண்ணப்பித்தல் போன்ற பல சேவைகள் வழங்கப்பட்டது. இதன் மூலம் 12.80 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. இத்தகைய சிறப்பான சேவைகளை வழங்குவதில் அரசுக்கு உள்ள உறுதிபாட்டை இந்த முயற்சிகள் நிலைநிறுத்தி உள்ளது என்று தெரிவித்துள்ளது.