
கினியாவில் இடம்பெற்ற ஒரு பரிதாபகரமான சம்பவத்தில், 8 மாத குழந்தையைத் தாயிடமிருந்து பறித்து சிம்பன்சி கொன்றது. “ஜேஜே” என அழைக்கப்படும் இந்த சிம்பன்சி, கினியாவில் கருவிகளை பயன்படுத்துவதற்காக அறியப்படுகிறது. சம்பவம் நடந்த போது, குழந்தையின் தாய் வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அந்த சிம்பன்சி, தாயின் மீது தாக்குதல் நடத்தி, குழந்தையைப் பறித்து தனது வழியில் கொண்டு சென்றது.
சுமார் 3 கி.மீ தூரம் குழந்தையைத் தூக்கிச் சென்ற சிம்பன்சி, அதன்பிறகு குழந்தையை கொன்று, தனது கருவிகளைப் பயன்படுத்தி குழந்தையின் உடலைச் சிதைத்ததாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குரங்குகள் கருவிகளை எவ்வாறு பயன்படுத்துகிறன என்பதையும், மனிதர்களின் மேல் அவர்களுக்கு ஏற்படும் மாற்றத்தையும் வெளிப்படுத்துகிறது. இவ்வாறு மனிதர்களின் மீது குரங்குகள் தாக்குதல் நடத்துவதற்கு காரணம், அவர்கள் மீது இருந்த பயம் போய்விட்டது என்பது தான் என்று ஆய்வாளர் ஜென் யமகோஷி கூறுகின்றார்.