இந்தியாவின் எல்லையில் பிரம்மபுத்திரா என்ற நதி ஒன்று உள்ளது. இந்த நதியின் குறுக்கே மிகப்பெரிய அணையை கட்ட சீனா ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த அணை 15 லட்சம் கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளது. இதனால் இந்த நதி பாய்ந்து ஓடும் இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு பெரும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நதி ஆசியாவின் மிகப்பெரிய வற்றாத ஜீவநதியாகும். இந்த நதி மொத்தம் 2800 கி.மீ நீளமுள்ளது, சராசரியாக வினாடிக்கு 19,800 கன மீட்டர் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்த ஆற்றின் கீழ் பகுதியில் நீர் மின்சார திட்டத்திற்காக உலகிலேயே மிகப்பெரிய அணை ஒன்றை சீனா அரசு கட்ட ஒப்புதல் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இது இமயமலைப் பகுதியில் உள்ள ஒரு பெரிய பள்ளத்தாக்கில் கட்டப்பட உள்ளது. இது உலகில் உள்ள அனைத்து அணைகளையும் விட மிகவும் பெரிதாக கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டில் தீபெத்தில் உள்ள மிகப்பெரிய ஜாம் நீர்மின் நிலையத்தை சீனா செயல்படுத்தி உள்ளது. தற்போது 2021 முதல் 25 வரை, இந்த ஐந்து ஆண்டு திட்டத்தில் பிரம்மபுத்திரா அணையை கட்ட சீனா முடிவு செய்துள்ளது. இதை கட்டினால் சீனாவுக்கு நதி மீது அதிகாரம் வந்து விடும். மேலும் எல்லை பகுதியில் இருந்து பெரியளவு தண்ணீர் இந்தியாவிற்குள் திறந்து விட வாய்ப்புள்ளது என்பதால் இந்தியா அதிக கவலை கொண்டுள்ளது. அதே சமயம் அருணாச்சலப் பிரதேசத்தில் பிரம்மபுத்திராவின் குறுக்கே இந்தியாவும் அணை கட்டுகிறது.