உலகம் முழுவதும் டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு வீடுகளிலும், ஆலயங்களிலும் குடில்கள் அமைப்பது வழக்கம். இரண்டாம் நூற்றாண்டு முதல் 11 ஆம் நூற்றாண்டு வரை கிறிஸ்து பிறப்பு விடுமுறையாக மட்டுமே கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் முதன் முதலில் குடிலை வடிவமைத்து தந்தவர் புனித பிரான்சிஸ் அசிசியார். அவர் பெரிய செல்வந்தரின் மகனாய் இருந்தும் அனைத்தையும் விட்டுவிட்டு துறவறம் மேற்கொண்டார். இறப்பதற்கு முன்பு கிறிஸ்துவின் பிறப்பை சிறந்த முறையில் கொண்டாட வேண்டும் என அவர் நினைத்தார்.

இதனையடுத்து 1223-ஆம் ஆண்டு போப்பின் அனுமதி வாங்கி பிரான்சின் நிஜ விலங்குகளான கழுதை, எருது, வைக்கோல் ஆகியவற்றை வரிசையாக வைத்து உயிர் உள்ள குடிலை உருவாக்கி அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுத்தார். அந்த நாள் இருளைப் போக்க மெழுகுவர்த்திகளும் தீப்பந்தங்களும் ஏற்றப்பட்டது.

அந்த நாள் குடலில் உயிரோடு இருந்த குழந்தை திருப்பலி நடைபெற்ற மூன்று மணி நேரமும் அழாமல் அமைதியாக இருந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து 14-ஆம் நூற்றாண்டில் உயிர் குடில் வைக்கப்பட்ட இடத்தில் புதிய தேவாலயம் அமைக்கப்பட்டது. முதல் குடில் வைக்கப்பட்ட வைக்கோல்கள் அந்த தேவாலயத்தில் வைத்து போற்றப்படுகிறது. அவற்றை தொட்டவர்கள் உடல், மன நோய்கள் தீர்ந்து பலன் பெற்றனர் என கூறப்படுகிறது.