
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25-ஆம் தேதி விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வீடுகளில் கிறிஸ்துமஸ் மரங்களுக்கு அலங்காரம் செய்து வாசலில் நட்சத்திரங்களை தொங்கவிடுவார்கள். கிறிஸ்துமஸ் தாத்தா வந்து பரிசுகளை அளிப்பார். ஆரம்ப காலகட்டத்தில் ஐரோப்பியர்கள் ஒளி மற்றும் பிறப்பு ஆகிய இரண்டையும் குளிர்கால கொண்டாட்டமாக கொண்டாடியுள்ளனர்.
அந்த கொண்டாட்டத்தின் போது மதம் சாரா பகுதிகளாக குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடல், நல்லெண்ணங்களை வளர்த்தல் என்பது பின்பற்றப்பட்டது. கி.பி சுமார் 33 ஆம் ஆண்டில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட அடக்கம் செய்யப்பட்டு மூன்றாவது நாள் சாவில் இருந்து உயிர்த்து எழுந்ததை குறிக்கும் ஞாயிறு தினத்தை கிறிஸ்தவம் பண்டிகையாக கொண்டாடியது.
ஆரம்பகால கிறிஸ்தவ சமூகங்களில் பிறந்தநாள் கொண்டாட்டங்களை விரும்பவில்லை. இதனால் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை. ஆனால் நான்காம் நூற்றாண்டில் திருச்சபைகள் இயேசுவின் பிறந்தநாளை விடுமுறையாக அறிவிக்க முடிவு செய்தனர்.
குளிர்கால கொண்டாட்டங்களின் தாக்கமும் அதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. யூதேயாவிலுள்ள பெத்லகேமில் மரியாவுக்கும், ஜோசப்புக்கும் பிறந்தவர் இயேசு. அந்த நாட்களில் நவீன கிரிகோரியன் நாட்காட்டி இல்லை. இதனால் புனித நூலான பைபிளிலும் இயேசு கிறிஸ்து 25-ஆம் தேதி தான் பிறந்தார் என்பது குறிப்பிடவில்லை.
இந்நிலையில் முதல் கிறிஸ்தவ ரோம பேரரசர் என அழைக்கப்படும் முதலால் முதலாம் கான்ஸ்டன்டைன் டிசம்பர் 25-ஆம் தேதியை கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாட வேண்டும் என அறிவித்தார். சில ஆண்டுகளுக்கு பிறகு முதலாம் போப் ஜூலியஸ் கிறிஸ்து பிறப்பை குறிப்பது டிசம்பர் 25-ஆம் தேதி என்பதை உறுதி செய்தார். இதனால் டிசம்பர் 24 ஆம் தேதி கிறிஸ்துமஸ் ஈவ் தொடங்கி டிசம்பர் 26ம் தேதி பாக்சிங் டே தொடர்கிறது.