மணிப்பூரில் கடந்த ஆண்டு மெய்தி மற்றும் குகி சமூகத்தினர் இடையே பெரும் மோதல் வெடித்து கலவரமாக மாறியது. இதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும் தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோதல் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. சமீபத்தில் பயங்கரவாதிகள் சிலர் இளம் பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் எரிந்து கொலை செய்துள்ளனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து குகி பயங்கரவாதிகள் 11 பேரை காவல்துறையினர் நேற்று என்கவுண்டரில் சுட்டு கொன்றனர். இந்நிலையில் மணிப்பூர் ஜிரிபாம் மாவட்டத்தில் மெய்தி சமூகத்தினரை சேர்ந்த 60, 31, 25 வயதை சார்ந்த 3 பெண்களையும், 3 குழந்தைகளையும் என 6 பேரை கடத்தி சென்றுள்ளனர். மேலும் 2 ஆண்களை குகி பயங்கரவாதிகள் உயிருடன் தீ வைத்து எரித்து கொலை செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.